Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணியம் இல்லையென்றால் நான் சினிமாவை விட்டே வெளியேறிவிடுவேன் – பார்வதி தடாலடி!

vinoth
வியாழன், 25 ஜூலை 2024 (08:14 IST)
தமிழில் பூ மற்றும் மரியான் ஆகிய படங்களில் நடித்தவர் பார்வதி திருவொத்து. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து தனக்கென ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவர் ஒரு பெண்ணிய நடிகையாக தன்னை முன்னிறுத்தி வருகிறார்.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்வதி தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடிக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பார்வதி அளித்த ஒரு நேர்காணலில் “நான் ‘பூ’ படம் நடிக்கும் போது எனக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. இடைவேளை நேரங்களில் இயக்குனர் சசி, அந்த சிறுகதையை எனக்குப் படித்துக் காட்டிக் கொண்டே இருப்பார். தமிழ் புரியாது என்றாலும் அது தாலாட்டு பாடுவது போலவே இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் கண்ணியம்தான் முக்கியம். இந்த சினிமா துறையில் கூட கண்ணியம் இல்லாவிட்டால் நான் இதில் இருந்து விலகிவிடுவேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments