சமூக வலைதளமான யுட்யூபில் மிகவும் பிரபலமாக அறியப்படும் கோபி மற்றும் சுதாகர் கிரவுட் பண்டிங் மூலமாக ஒரு படத்தை தொடங்க உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தனர். இதற்காக தங்கள் யூட்யூப் சேனலின் பாலோயர்ஸிடம் இருந்து நிதி கேட்டனர். இதன் மூலம் சில கோடிகள் வரை வசூலானதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படத்தை இன்னும் தொடங்காமல் வேறு ஒரு படத்தை தங்களது பரிதாபங்கள் புரொடக்ஷன் மூலமாக தயாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் பூஜையோடு தொடங்கிய இந்த படத்தை விஷ்ணு விஜயன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் விரைவில் ரிலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அவர் நடிக்கும் புதிய வெப் சீரிஸாக “கோடியில் இருவர்” உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் யு டியூபிலேயே வெளியாக உள்ளது. படிப்பை முடித்துவிட்டு ஆப் ஒன்றை டெவலப் செய்ய முயலும் இரண்டு இளைஞர்களின் கதையாக இந்த சீரிஸ் உருவாகும் என சொல்லப்படுகிறது. இந்த சீரிஸின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றுள்ளது.