Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் வருகிறது மெட்டி ஒலி 2… இயக்குனர் பற்றி வெளியான தகவல்!

Advertiesment
விரைவில் வருகிறது மெட்டி ஒலி 2… இயக்குனர் பற்றி வெளியான தகவல்!

vinoth

, செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (07:16 IST)
மெட்டி ஒலி தொடர் கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் சன் டீவியில் ஓளிப்பரப்பாகி மக்களின் ஆரவார செல்வாக்கைப் பெற்றது. தமிழ் தொலைக்காட்சி உலகில் முதன் முதலில் 1000 எபிசோட்கள் ஒளிப்பரப்பப்பட்ட தொடரும் இதுவே ஆகும். இந்த நாடகத்தை இயக்கி அதில் முக்கியக் கதாபாத்திரமான கோபி எனும் கேரக்டரில் நடித்தார் இயக்குனர் திருமுருகன்.

இந்த சீரியலில் இமாலய வெற்றி காரணமாக இரண்டு முறை இந்த சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது. அதையடுத்து இப்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

முதல் பாகத்தை தயாரித்த சினி டைம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க, இயக்குனர் விக்ரமாதித்யன் இயக்க உள்ளாராம். முதல் பாகத்தில் நடித்தவர்களும் இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பார்களாம். மேலும் பலரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லால் சலாம் டிரைலர் ரிலீஸ்.. முன்னாள் மனைவிக்கு வாழ்த்து கூறிய தனுஷ்..!