இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது.
இதனால் பாண்டிராஜ் தன்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதையை உருவாக்க ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். திரைக்கதையை எழுதி முடித்த பாண்டிராஜ், விஷால் மற்றும் ஜெயம் ரவி ஆகியோரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் இருவருமே கைவிரித்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.
இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அந்த படத்தைத் தொடங்கவுள்ளார். இந்த படத்துக்காக விஜய் சேதுபதி தன்னுடைய சம்பளத்தை அதிரடியாகக் குறைத்துக் கொண்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. முன் தயாரிப்புப் பணிகள் இந்த படத்துக்காக நடந்து வந்த நிலையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.