Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் படுகவர்ச்சியாக நடித்த தமன்னா...

மீண்டும் படுகவர்ச்சியாக நடித்த தமன்னா...
, வியாழன், 15 ஜூன் 2023 (17:35 IST)
தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வரும் தமன்னா. இவர் பையா,வீரம், அயன், சுறா உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர்  என்ற படத்தில் முக்கிய வேடத்தில்    நடித்து வருகிறார். இவர் பாலிவுட் பிரபல  நடிகர் ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் மீடியாவில் கசிந்த நிலையில், லஸ்ட் ஸ்டோரிஸ் -2 என்ற வெப் சீரிஸில் படு கவர்ச்சியாக நடித்ததற்காக இவர் மீது விமர்சனங்கள் வலுத்தது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு வெப் சீரிஸில்  கவர்ச்சியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இன்று வெளியாகியுள்ள ஜீ கர்தா என்ற வெப் சீரிஸிலும் அவர் படுக்கையறை காட்சியில் நடித்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

இப்படத்தை 18 வயதிற்கு மேலுள்ளவர்கள் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாலத்தீவில் ஆண் நண்பருடன் குத்தாட்டம் குதூகலிக்கும் குட்டி நயன்!