Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசன் உதவியில் புதிய இசைப்படைப்பு-ஸ்ருதிஹாசன்

Advertiesment
Rajkamal Film International
, சனி, 23 செப்டம்பர் 2023 (20:45 IST)
ராஜ்கமல் பிலிம் இண்டர் நேசனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பை உருவாக்கவுள்ளதாக ஸ்ருதிஹாசன் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் அமெரிக்காவில் இசைத்துறையில் படித்து இந்தியா திரும்பிய பின் உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில் ஒரு பாடலை இசையமைத்து பாடியிருந்தார்.

அதன்பின்னர், சூர்யாவின் 7 ஆம் அறிவு, விஜய்யுடன் புலி, அஜித்துடன் விவேகம்  ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு இசை ஆல்பத்தை உருவாக்க உள்ளதாகவும், அதில் தன் தந்தை கமல்ஹாசனின் பங்களிப்பு இருக்கும் எனவும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தார்.

அதன்படி, ''ராஜ்கமல் பிலிம் இண்டர் நேசனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பை உருவாக்கவுள்ளதாக'' ஸ்ருதிஹாசன் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விரைவில் இதுபற்றி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்கொலை குறித்து நானும் யோசித்திருக்கிறேன்-நடிகர் கமல்ஹாசன்