Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் மனதில் துறுதுறுத்த இளைஞராகவே பதிந்திருப்பவர்- பிரபல இயக்குனருக்கு கமல் வாழ்த்து

Advertiesment
singeetam srinivasa rao -kamalhaasan
, வியாழன், 21 செப்டம்பர் 2023 (14:18 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர், இந்தியன்2, கமல்233 ஆகிய படங்களில்  நடித்து வருவதுடன், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் படங்கள் தயாரிப்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதுடன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில்,  பிரபல இயக்குனர் சிங்ககிதம் சீனிவாசராவுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மிக மூத்த இயக்குநராக இருக்கலாம், ஆனாலும் என் மனதில் துறுதுறுத்த இளைஞராகவே பதிந்திருப்பவர் திரு. சிங்கிதம் சீநிவாசராவ்காரு.

அபூர்வ சகோதரர்கள், பேசும் படம், மைக்கேல் மதன காமராஜன் கால சந்தோஷத் தருணங்கள் எனக்குள் இப்போதும் குமிழியிடுகின்றன. மாயாபஜார் காலம் தொடங்கி, என் மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் தொடர்ந்து இன்னமும் உற்சாகத்தோடு வளையவரும் சீநிவாசராவ் அவர்களுக்கு என் மனமகிழ்ந்த பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கமல் நடிப்பில், சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கிய பேசும் படம் விரைவில் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல தயாரிப்பாளருடன் திரிஷாவுக்கு திருமணமா?