Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் விரும்பிய ஒளிப்பதிவாளர்…. அடுத்த படத்துக்கு அவர்தான்!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (16:31 IST)
61 படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் இந்த படத்தின் பூஜை நடக்க உள்ள நிலையில் மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.

இந்நிலையில் இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக வலிமை படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். வலிமை படத்தில் அவருடன் பணியாற்றியதில் அஜித்துக்கு ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவரே விரும்பி நீரவ் ஷாவை ஒப்பந்தம் செய்ய சொன்னதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு இருவரும் பில்லா படத்தில் இணைந்தது பணியாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments