Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எகிறிய பீஸ்ட் பட்ஜெட்… இயக்குனர் மேல் அதிருப்தியில் சன் பிக்சர்ஸ்!

எகிறிய பீஸ்ட் பட்ஜெட்… இயக்குனர் மேல் அதிருப்தியில் சன் பிக்சர்ஸ்!
, சனி, 15 ஜனவரி 2022 (16:26 IST)
பீஸ்ட் படத்தின் பட்ஜெட் சொன்னதை விட 20 கோடி ரூபாய் அதிகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீஸ்ட் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே வெளியான போஸ்டர்களும், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் ரசிகர்களைக் குஷியாக்கின. இந்நிலையில் தீபாவளியில் இருந்தே பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகப்போவதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் இதுவரை ரிலிஸ் ஆகவில்லை.

இந்நிலையில் படத்தைப் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் படத்துக்காக ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட்டையும் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையிலேயே எட்டி விட்டாராம். இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் நெல்சன் மீது பயங்கர அப்செட்டில் இருக்கிறதாம். இதனால் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட 20 கோடி ரூபாய் வரை அதிகமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனாவா? விக்ரம் படப்பிடிப்பு நின்ற காரணம்!