Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அன்னபூரணி… ஆனா தியேட்டர் வசூல் இவ்ளோதான்!

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (12:32 IST)
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து அவர் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்தார். அந்த படம் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் மழை பெய்ததது.

இதையடுத்து நயன்தாராவின் சமீபத்தைய ரிலீஸாக அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நயன்தாராவோடு ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்களே வந்தன. முதல் நாளில் இந்த படம் 60 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அந்த படம் திரையரங்கு மூலமாக சுமார் 80 லட்சம் மட்டுமே தயாரிப்பாளர் ஷேராக கலெக்ட் செய்துள்ளதாம். ஆனால் இந்த படத்துக்கு நயன்தாராவின் சம்பளம் 10 கோடி ரூபாயாம். சம்பளத்தை அடுத்தடுத்த படங்களுக்கு ஏற்றி வந்தாலும், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் படங்களின் கலெக்‌ஷன் அடிவாங்கிக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments