Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்சத்திரம் நகர்கிறது படத்தை அமெரிக்காவில் வெளியிடும் பிரபல நிறுவனம்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (09:05 IST)
பா ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைபடம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது முற்றிலும் வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். வழக்கமான தன் தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமல் நிறைய புதுமுகக் கலைஞர்களோடு இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் சாதாரண காதல் படமாக இல்லாமல் காதலைப் பற்றிய அரசியல் படமாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை அமெரிக்காவில் ப்ரைம் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய ஹிட் ஆன விக்ரம் திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments