Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சூர்யாவுடன் தான் என் கனவுப் படம் - பா.ரஞ்சித் ! வைரலாகும் வீடியோ

நடிகர் சூர்யாவுடன் தான்  என்  கனவுப் படம் -  பா.ரஞ்சித் ! வைரலாகும் வீடியோ
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (15:10 IST)
தனது கனவுப் படத்தின் நாயகன் சூர்யா என்றும் விரைவில் அப்படத்தை தொடங்கவுள்ளதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
 

அட்டகத்தி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் பா.ரஞ்சித்.  இதையடுத்து, மெட்ராஸ், கபாலி, காலா, சர்பாட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது, பா. ரஞ்சித் இயக்கத்தில் யாழி பிலிம்ஸ் நிறுவனம் – நீலம் புரடெக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம்  நகர்கிறது.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன் டான்ஸிங் டோஸ் கபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் வரும்  ஆகஸ்ட் 31 ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில்  நடந்தது, இதில், படக்குழுவினர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், சமீபத்தில் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா. ரஞ்சித்,  சூர்யா சாருக்காக எழுதப்பட்ட ''ஜெர்மன்'' என் கனவுப் படம்.  எனக்கு  மேட் மேக்ஸ் சூரி, பிளேட் ரன்னர் ஆகியவை என் பேவரட் படங்கள். சோசியல் பாலிடிக்ஸ்  பிலிம்கள் நான் ஸ்பைப் லீயிடம் இருந்து உத்வேகம் பெற்றேன். 

இந்தக் கனவுப் படம் இமேஜினரி மற்றும் பேன்டஸியாகவும் இருக்கும். இதற்காக ஜெர்மனுக்குச் சென்று அங்குள்ளா உலகை படம்பிடிப்போம். அது நிச்சயம் விஎஃப்எக்ஸ் படம்தான் அதை அடைவதற்கான பிளாட்பார்ம்தான் இது எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது படத்தின் சென்சார் தகவல்!