Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புது காதலியையும் பிரிந்தார் சமந்தாவின் முன்னாள் கணவர் - டோலிவுட்டில் சலசலப்பு!

Advertiesment
புது காதலியையும் பிரிந்தார் சமந்தாவின் முன்னாள் கணவர் - டோலிவுட்டில் சலசலப்பு!
, புதன், 5 ஜூலை 2023 (14:10 IST)
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதற்கு காரணம் சமந்தாவின் வளர்ச்சி தான். அவரது தொடர் வெற்றிகளை சைதன்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
 
இதையடுத்து சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். திடீரென மயோசிஸ் என்ற அரியவகை தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். 
 
சமந்தா இப்படி இருப்பதற்கு காரணம் முன்னாள் கணவர் தான் என ரசிகர்கள் வெறுப்பு தெரிவித்தனர். இப்படியான நேரத்தில் நாகசைதன்யா நடிகை சோபித துலிபாலாவுடன் டேட்டிங் சென்ற போட்டோக்கள் இணயத்தில் வெளியாகி வைரலாகியது. இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 
அதன் பிறகு கிசுகிசுக்களுக்கு பதில் அளித்த நடிகை சோபிதா துலிபாலா "என்னவென்றே தெரியாமல் பேசுபவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என எனக்கு அவசியமில்லை. நான் எந்த தவறும் செய்யாத நேரத்தில் அது பற்றி ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும் ?  "அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கு பதில் கொடுப்பதை விட, அவரவர் வாழ்க்கையை பார்க்க வேண்டும்" என்றார். இந்நிலையில் தற்போது டோலிவுட் சினிமாவின் தலைப்பு செய்தியாக நாக சைத்தாயா சோபிதாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் போல் இன்ஸ்டாவில் இணைந்த பவன் கால்யாண்! குறைந்த நேரத்தில் பல மில்லியன் பாலோயர்ஸ்