Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி பேசலாமா மிஷ்கின்? - பொங்கியெழுந்த நெட்டிசன்கள்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (16:17 IST)
பேரன்பு படம் தொடர்பான விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
இயக்குனர் ராம் இயக்கியுள்ள பேரன்பு படம் சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். 
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு பேசிய போது “நடிகர் மம்முட்டி மட்டும் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அவரை ரேப் செய்திருப்பேன்” என பேசினார். இதைக்கேட்டு விழாவிற்கு வந்த சிலர் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ள இன்றைய சூழ்நிலையில், மிஷ்கின் கூறிய கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
 
இது தொடர்பாக ஒரு பெண் தனது டிவிட்டர் பக்கத்தில் “அறுவறுப்பாக இருக்கிறது. கற்பழிப்பு என்கிற வார்த்தையை சாதரணமாக பயன்படுத்துவது வேதனையாக இருக்கிறது” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் கொடுத்துள்ள நடிகர் பிரசன்னா “மிஷ்கின் என்னுடைய நண்பர்தான். ஆனால், பெண்கள் மற்றும் நடிகர்கள் மீதான அவரின் கருத்து அறுவெறுப்பாகவே இருக்கிறது. அவர் பேசியதை கேட்டு கை தட்டியவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்