காலாவின் நிறம் கருப்பா? காவியா? தேடினேன். என் தேடல் எனக்கு சொன்னது.
	
	
	 
	அரசு எந்திரத்தின் ரத்தப்படுகொலையை நியாயப்படுத்த, அதற்கான பொறுப்பிலிருந்து ஆட்சியாளர்களை விடுவிப்பத்தற்காக கூத்து வாத்தியார்களால் அனுப்பப்பட்ட கூத்தாடி தான் காலா என்னும்  ரஜினி .
	 
 
 			
 
 			
					
			        							
								
																	
	100 நாட்கள் போராடி, 13 உயிர்களை தியாகம் செய்தப் பிறகுதான் காலாவுக்கு வந்தது  தூத்துக்குடி கரிசனம். மகாகனம் பொருத்திய  வேங்கய்  மகன் கூத்து ஒன்று ஆடி இருக்கிறார்.  கூத்தாடியது அவர் ஆக இருந்தாலும், அவரின் அவரின் கூத்து வாத்தியார்கள் யார் என்று தெரியவில்லை ?
	 
	போராட்டமே தமிழர்களின் வாழ்கை:
	 
	போராட்டமே தமிழர்களின் வாழ்க்கை ஆகிப்போனப்பிறகு போராட்டமே கூடாது என்கிறரர் காலா.  போராட்டத்திற்கு காரணமானவர்களைப் பற்றி கேட்டால் காதை போத்தி கொள்வார் காலா. தொழில் வளம் பாதிக்குமா? யாருக்கு காலா சார்? காற்றை நிலத்தை உணவை நீரை நஞ்சாக்கும் நாசகரமான தொழில்களில், மக்களின் சமாதிகளில், தான் அரசின் சிம்மாசனமா  காலா சார்?
	 
	எதற்கெடுத்தாலும் போராட்டம்:
	 
	எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் மயான பூமி ஆகி விடுமாம். காலா சார்!  நியூட்ரினோ , நெடுவாசல், கதிராமங்கலம்  ஸ்டெர்லைட் இன்னும் சாகர் மாலா திட்டங்கள் எல்லாம் உங்கள் கூத்து வாத்தியார்கள் திறம்பட செயல் படுத்தினால் தான் தமிழகம்  மயானம் ஆகும்.
	 
	இது  எங்கள் மண்!  நடப்பது உரிமை சார்த்த போராட்டங்கள்!
	உணர்வு சார்த்த போராட்டங்கள்!
	இந்த போராட்டங்கள் தான் எங்களின் ஆயுதம் !
	வீரவசனம்ப் பேசி இதைக்கொச்சைப்படுத்த வேண்டாம் !
	 
	தர்ம யுத்தம் புகழ் மனசாட்சியின் குரலா?
	 
	ஜல்லிக்கட்டைப் போல தூத்துக்குடியிலும் பயங்கரவாதிகள் உள்ளே புகுந்தார்கள். காலா சார்! இது என்ன நம் தர்ம யுத்தம் புகழ் மனச் சாட்சியின் குரலா?  எப்போது அவர் உங்கள் கூத்து வாத்தியார்களுள் ஒருவர் ஆனார்.
	 
	கூத்தாடிகளையும், கூத்து வாத்தியர்களையும்
	 
	போலீஸ்காரர்களை தாங்கியவர் மீது நடவடிக்கை வேண்டும் தான். ஆனால் 13 அப்பாவிகளை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது சொல்லுங்கள் வேங்கய் மகனே . அது உங்கள் கூத்து வாத்தியார் வசனத்தில் இல்லையா? மக்கள் போராடினால் சுடுவார்களா?   இந்த அரசின் ஏவல்துறை கொலை செய்யுமா? காலா சார்! ஜெயலலிதா பயங்கரவாதிகளை மட்டும் அல்ல உங்களைப் போன்ற கூத்தாடிகளையும், கூத்து வாத்தியர்களையும் கட்டுக்குள் வைத்து இருந்தார்.
	 
	 
	யார் நீ?
	 
	யார் நீ என்ற ஒற்றைக் கேள்வியில்  மொத்த மக்களின் உணர்வுகளும் வெளிப்பட்டது. உங்கள் கூத்து வாத்தியார்கள் சொல்லித் தராத ஒன்றை உபதேசிக்கிறேன் கேளுங்கள் காலா சார் !
	 
	கூத்தில் வேண்டுமானால் நீங்கள் ராஜா வேசம் கட்டலாம்  ஆனால் நிஜத்தில் உங்களுக்கு கூத்தாடி வேஷம் தான்.  ராஜா வேஷம் இல்லை.