Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்யராஜூடன் சாந்தனு இணையும் ‘முருங்கைக்காய்’ படம்

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (12:23 IST)
பாக்யராஜூடன் சாந்தனு இணையும் ‘முருங்கைக்காய்’ படம்
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சாந்தனுவுக்கு அதன் பின்னர் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருவது குறித்த செய்திகள் ஏற்கனவே தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் ’முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
 
 சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கவிருக்கும் இந்த படத்தை ஸ்ரீஜார் என்பவர் இயக்கவுள்ளார்.  இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கே.பாக்யராஜூம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மனோபாலா, மதுமிதா, யோகி பாபு, ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் 
 
தரன்குமார் இசையில் மேஷ் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தை லிப்ரா நிறுவனம் தயாரிக்க உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
நடிகர் சாந்தனு ஏற்கனவே சிம்புதேவன் இயக்கி வரும் ‘கசடதபற’ மற்றும் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராவண கூட்டம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments