Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பண மோசடி வழக்கு….பிரபல நடிகையை கைது செய்ய தடை ! நீதிமன்றம் உத்தரவு

Advertiesment
பண மோசடி வழக்கு….பிரபல நடிகையை கைது செய்ய தடை !  நீதிமன்றம் உத்தரவு
, புதன், 10 பிப்ரவரி 2021 (20:43 IST)
கேரள மாநில உயர்நீதிமன்றம், ரூ.39 லட்சம் கோடி பண மோசடி செய்ததாக நடிகை சன்னி லியோன் அவரது கணவர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்யத் தடைவிதித்துள்ளது.

பிரபல நடிகை சன்னி லியோன். இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்துவரும் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் கொச்சியிலுள்ள ஒரு துணிக்கடையில் நடைபெற  இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுவதாகக் கூறி சுமார் ரூ.39 லட்சம் பணம் வாங்கியிருந்தார். ஆனால் அந்நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென துணைக்கடை நிறுவனர் கோரியிருந்தார்.

இதுகுறித்த விசாரணை நடந்து வந்த நிலையில், சன்னிலியோன் அவரது கணவர் டேனியல் ஹப்பர் உள்ளிட்ட 3 பேர் கேரள நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இன்று நீதிபதி அசோக் மோகன் தலையிலான அமர்வில் நடிகை , சன்னிலியோன் அவரது கணவர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்ய தடைவிதித்து உத்தரவிட்டது.

மேலும் குற்றப்பிரிவு போலீஸார் தேவைப்பட்டால் 3 பேரிடமும் விசாரணை செய்யலாம் எனவும் இதற்கு முன் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏலே படம் ரிலீஸ் தொடர்பாக...தயாரிப்பாளர்கள் - தியேட்டர் உரிமையாளர்கள் இடையே மோதல் !