Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவுக்கு ஜாலி டூர்.. சன்னி லியோன் மீது புகார்! – கேரள போலீஸ் விசாரணை!

கேரளாவுக்கு ஜாலி டூர்.. சன்னி லியோன் மீது புகார்! – கேரள போலீஸ் விசாரணை!
, ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (11:30 IST)
பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்து கொள்வதாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்று பின்னர் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் சமீபத்தில் கேரளாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நடக்கவிருந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சன்னி லியோனுக்கு ஷியார் என்பவர் 29 லட்சம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சன்னி லியோன் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதாகவும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுப்பதாகவும் அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சன்னி லியோன் தரப்பில் “நிகழ்ச்சி ஏற்பாடுகள் கொரோனா காரணமாக பலமுறை தள்ளி வைக்கப்பட்டதாகவும், இதனால் தனது கால்ஷீட்டில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் நிகழ்ச்சி நடக்கும் தேதியை உறுதி படுத்தினால் தான் கலந்து கொள்வதாக சன்னி லியோன் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து இருதரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களின் உடை குறித்து பேசிய விஜய்: மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி