Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீ... நீ எல்லாம் ஒரு ஆளு; மீராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! #IgnoreNegativity !!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (16:51 IST)
மீரா மிதுனை விமர்சித்து, திட்டி தீர்த்து நெட்டிசன்கள் #IgnoreNegativity என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 
 
மீரா மிதுன் நடித்த சில படங்களுக்காக அவர் எப்போதும் பேசப்பட்டதே இல்லை. ஏதேனும் சர்ச்சைகளை இழுத்துக் கொண்டு வந்து அவ்வப்போது சமுக வலைதளங்களில் நடக்கும் விவாதங்களில் மையப்புள்ளியாக இருப்பார். அந்த வகையில் அவர் இப்போது கைவைத்திருப்பது நடிகர் சூர்யாவை. 
 
சூர்யாவோடு தானா சேந்த கூட்டம் படத்தில் ஒரு துக்கடா கதாபாத்திரத்தில் நடித்தார் மீரா. ஆனால் அந்த படத்தில் தன் காட்சிகளை ஒரே டேக்கில் நடித்து முடித்ததாகவும் சூர்யா எல்லாக் காட்சிகளையும் 10 முறைக்கும் மேல் நடித்ததாகவும், அவருக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது எனவும் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.
இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் அவரை இணையத்தில் திட்ட ஆரம்பித்தனர். அதில் ஒரு சிலர் ஆபாசமாக மீராவை திட்ட இப்போது மீரா பதிலுக்கு சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களுக்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இனிமேல் என்னை ஆபாசமாக பேசினால் ‘நானும் பதிலுக்கு ஜோதிகா மற்றும் சங்கீதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவேன் (சில ஆபாசமான வார்த்தைகளை சொல்கிறார்). மேலும் என்னைத் திட்டுவதை விட்டு நான் சாதித்த அளவுக்கு நீங்களும் சாதியுங்கள் எனக் கூறியுள்ளார். 
 
இந்த வீடியோவானது ரசிகர்களை கோபமாக்கியுள்ளது. சம்மந்தமே இல்லாமல் நடிகர்களின் மனைவி மீது ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது சரியானதல்ல என திட்டி வருகின்றனர், அதோடு #IgnoreNegativity என டிரெண்டாக்கியும் வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments