Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யா படத்தில் வாணி போஜன் -லாக்கப் படத்துக்குப் பின் வரிசையாக குவியும் வாய்ப்புகள்!

Advertiesment
Vani Bhojan
, வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:28 IST)
ஓ மை கடவுளே படத்துக்கு பின் லாக்கப் படத்தில் நடித்துள்ள வாணி போஜனுக்கு வரிசையாக வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

ஒரு காலத்தில் சீரியலில் நடிக்கும் நடிகைகளை சினிமாவில் நடிக்க வைக்க யோசிப்பார்கள் . அப்படியே நடித்தாலும் அண்ணி தங்கை வேடங்கள் மட்டுமே கொடுப்பார்கள். அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்று வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வருகிறார்.

அவருக்குப் பிறகு சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார்.  சன் டிவியில் ஒளிபரப்பான " தெய்வமகள் " சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே படு பேமஸ் ஆகிவிட்டார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த  ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார்.

அதையடுத்து அவர் நடித்துள்ள லாக்கப் படம் ஓடிடியில் ரிலிஸாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு இப்போது வரிசையாக வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. சூர்யா தயாரிக்கும் இரு படங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. குறுகிய காலத்தில் வாணி போஜன் கோலிவுட்டில் இத்தனைப் பட வாய்ப்புகளை பெறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் அழுததன் காரணம் இதுதான் – பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!