Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதைக்கு டிஸ்சார்ஜ் இல்லை – அபிஷேக் பச்சன் டிவிட்டால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (16:03 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அபிஷேக் பச்சன் எப்போது டிஸ்சார்ஜ் என்பது குறித்து பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதையடுத்து சிகிச்சையில் குணமாகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் முதலில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதன் பின்னர்  அமிதாப்பச்சன் அவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இன்னமும் அபிஷேக் பச்சன் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் பகிர்ந்த டிவீட் ஒன்று இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ‘மருத்துவமனையில் 26-வது நாள். டிஸ்சார்ஜ் திட்டம் - இல்லை, பச்சன், உன்னால் முடியும். நம்பிக்கை கொள் ’ எனக் கூறியுள்ளார். அதனால் அவருக்கு இன்னமும் கொரோனா பாதிப்பு முழுமையாக குணமாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்து கொண்டாரா? 2வது மனைவி 6 மாத கர்ப்பமா?

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

அடுத்த கட்டுரையில்
Show comments