Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டி கதை கேட்க தயாரா...? "மாஸ்டர்' ஆடியோ வெளியீட்டு விழா எங்கு, எப்போது தெரியுமா?

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (15:27 IST)
பிகில் படத்தை தொடர்ந்து கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் "மாஸ்டர்" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.
 
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தினத்தை குறி வைத்து வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து அண்மையில் வெளிவந்த குட்டி கத பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையும் ஈர்த்த இந்த பாடல் தற்போது வரை 23 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. ஆம், வருகிற மார்ச் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை லீலா பேலஸில் நடைபெறவுள்ளது என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் கூறும் குட்டி கதை கேட்பதற்காக புல்லிங்கோ வெறித்தனமான வெய்ட்டிங்கில் இருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் வாங்கிய நிலத்தில் வந்த வில்லங்கம்! 9 கோடி ரூபாயை திரும்ப தரும் மகாராஷ்டிரா அரசு!

விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் அறிவிப்பு.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸீரோ பேலன்ஸில் குடும்பம் நடத்துவது எப்படி? உண்மையை நகைச்சுவையாக சொன்ன ‘குடும்பஸ்தன்’! - திரை விமர்சனம்!

மதிப்புமிக்க பத்ம விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அஜித் அறிக்கை..!

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments