Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழம் போவதும், கரை நடப்பதும் அவள் உரிமை: பொள்ளாச்சி விவகாரம் குறித்து மாரி செல்வராஜ்

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (08:15 IST)
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து ரஜினி, அஜித், விஜய் தவிர கிட்டத்தட்ட எல்லா திரையுலகினர்களும் கருத்து தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் 'பரியேறும் பெருமாள்' என்ற ஒரே படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து ஒரு கவிதையை பதிவு செய்துள்ளார். அந்த கவிதை பின்வருமாறு:
 
ஒரு பெண் பிள்ளையின் தகப்பனாக
எனக்கு எந்தப் பயமும் இல்லை பதட்டமுமில்லை 
என் மகளுக்கு நான் கடலைக் காட்டுவேன்
கடலின் அழகைக் காட்டுவேன்
அழகின் ஆழம் காட்டுவேன்
ஆழத்தில் உயிர்களைக் காட்டுவேன்
உயிர்களின் விநோதம் காட்டுவேன்
விநோதங்களின் விபரீதங்களைக் காட்டுவேன்
விபரீதங்களின் காரணம் காட்டுவேன்
காரணங்களின் முடிவுகளைக் காட்டுவேன்
முடிவுகளின் இழப்புகளைக் காட்டுவேன்
இழப்புகளிலிருந்து மீள வலு நீச்சல் காட்டுவேன்
நீச்சலின் நியாயம் காட்டுவேன்
நியாயத்தின் நிம்மதி காட்டுவேன்
இத்தனைக்கும் பிறகு அவள் பயந்தால்
மறுபடியும் கடல் காட்டுவேன்
அதன் அழகைக் காட்டுவேன்
அது அவளுடைய கடல் 
அது அவளுடைய அலை 
அவள் நம்புகிறவரை அவளுக்கு கடல் காட்டுவேன்
ஆழம் போவதும் 
கரை நடப்பதும்
அவள் உரிமை
 
இந்த கவிதைக்கு வழக்கம்போல் ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகள் ஆதரவையும் எதிர்ப்பையும் மாறி மாறி காட்டி வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்