மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

vinoth
திங்கள், 3 நவம்பர் 2025 (15:27 IST)
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக ‘பைசன்’நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. திரையரங்கு மூலமாக இந்த படம் சுமார் 60 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மாரி செல்வராஜ் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்துக்கான எழுத்து வேலைகளைத் தற்போது மாரி செல்வராஜ் தொடங்கியுள்ள நிலையில் இந்த படம் சில நூற்றாண்டுகளுக்கு முந்தையக் கதையாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை ஒரு மாயாஜால படமாக மாரி செல்வராஜ் உருவாக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷின் நூறாவது படத்தில் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா!

அஜித்குமார் ரேஸிங் அணியோடு கைகோர்த்த ரிலையன்ஸின் ‘கேம்பா’ கோலா!

புது லுக்கில் மாஸ் காட்டும் தனுஷ்.. பாலிவுட் மோகம்.. மனுஷன் செம்மையா இருக்காரே

காந்தாராவா மாறிய சூர்யா.. ‘கருப்பு’ படத்தில் இப்படியொரு சீனா? தேறுமா?

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

அடுத்த கட்டுரையில்
Show comments