தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட்!. நடிகை மான்யா ஆனந்த் பகீர்!..

Bala
செவ்வாய், 18 நவம்பர் 2025 (13:32 IST)
manya anand

சினிமா துறையில் நடிகைகளாக வளர்வது என்பது கூட நடந்து விடும். ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்காமல் வாய்ப்புக்காக அலையும் போது பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். அதில் முக்கியமானது வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது.
ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அந்த படம் வெற்றி பெற்று ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டால் தொடர் வாய்ப்புகள் கிடைக்கும்.

அதன் மூலம் நிறைய பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற முடியும். சொந்த வீடு, கார், பங்களா என சொகுசாக வாழலாம் என்கிற ஆசையில்தான் பல பெண்களும் சினிமாவை நோக்கி படையெடுக்கிறார்கள்/ அப்படி வரும் பெண்களிடம் சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘வாய்ப்பு வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என கேட்பது பல வருடங்களாக நடந்து வருகிறது.

manya anand

எல்லா இயக்குனர்களையும் எல்லா தயாரிப்பாளர்களையும் அப்படி சொல்ல முடியாது என்றாலும் சினிமா துறையில் இது அதிகமாகவே நடக்கிறது. கடந்த பல வருடங்களாகவே பல பெண்கள் தங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பேசி வருகிறார்கள். இந்நிலையில் தான் சீரியல் நடிகை மான்யா ஆனந்த் நடிகர் தனுஷ் பற்றி கூறியுள்ள பாலியல் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தனுஷின் ஒரு படத்தில் நடிப்பதற்காக அவரின் மேனேஜர் ஸ்ரேயாஸ் என்னை அணுகினார் அப்போது கமிட்மெண்ட் என்கிற பெயரில் நான் தனுஷுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என கேட்டார். நான் ‘முடியாது’ என்றேன். ‘தனுஷ் சாரிடம் கூட அட்ஜெஸ்ட் செய்ய மாட்டீர்களா?’ என கேட்டார். ‘யாராக இருந்தாலும் முடியாது’ என சொல்லிவிட்டேன்’ என ஒரு பேட்டியில் மான்யா ஆனந்த் கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்