Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் 18+ விஷயங்கள் அதிகமாகதான் இருக்குமாம்… வெங்கட் பிரபுவின் மன்மதலீலை!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (14:32 IST)
மன்மத லீலை படத்தின் போஸ்டரை சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டு கவனம் பெற்றது.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியானது. மன்மதலீலை என்ற தலைப்பில் ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் பாலசந்தர் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் வெங்கட்பிரபுவின் படத்துக்கு மன்மத லீலை என்று தலைப்பு வைக்கக்கூடாது என பாலச்சந்தர் ரசிகர் மன்றத்தின் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ரசிகர் மன்றத்தின் தலைவராக இருப்பவர் நடிகர் ராஜேஷ் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வெங்கட்பிரபு தரப்போ முறைப்படி பாலச்சந்தரின் வாரிசுகளிடம் தலைப்புக்கான் உரிமையை வாங்கிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க இந்த படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பெயருக்கேற்றவாறு 18+ விஷயங்களை மிக அதிகமாகவே சேர்த்துள்ளாராம் வெங்கட் பிரபு. படத்தின் கதாநாயகனின் வாழ்க்கையில் இருவேறு கால கட்டங்களில் நடக்கும் கதைக்களத்தை வைத்து உருவாக்கியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments