Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேமலு 2 படம் தாமதமாக மமிதா பைஜுதான் காரணமா?

vinoth
வியாழன், 27 பிப்ரவரி 2025 (14:19 IST)
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படமான ‘பிரேமலு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பெரிய நடிகர்கள் இல்லாமல் நஸ்லின், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் சுமார் 130 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்த படத்தில் நடித்திருந்த நஸ்லின் மற்றும் மமிதா பைஜு ஆகிய இருவரும் இப்போது சென்சேஷனல் நடிகர்களாகியுள்ளனர். கேரளா தாண்டியும் உள்ள மலையாள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தின் மலையாள வெர்ஷனே மிகப்பெரிய அளவில் வசூலித்தது. மறுபடி தமிழ் டப்பிங் ரிலீஸாகி அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உடனே படக்குழு அறிவித்தது. இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை படப்பிடிப்பை தொடங்கவில்லை. அதற்குக் காரணம் மமிதா பைஜுதான் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதால் பிரேமலு 2 ஷூட்டிங்கில் அவரால் தற்போது பங்கேற்க முடியாத சூழல் உருவானதாம். அதனால் ஜனநாயகன் ஷூட்டிங் முடிந்ததும், அவர் பிரேமலு 2 ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பிரேமலு 2 படம் தாமதமாக மமிதா பைஜுதான் காரணமா?

துருவ நட்சத்திரம் விடிவு காலம் பிறந்ததா?... வெளியான ரிலீஸ் தேதி அப்டேட்!

தூதுவிட்ட பிரம்மாண்ட இயக்குனர்… கண்டுகொள்ளாத AK.. பின்னணி என்ன?

என் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.. யேசுதாஸ் மகன் மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments