Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கில் ரிலீஸ் ஆன லவ்டுடே… தமிழில் நடந்த மேஜிக் நிகழுமா?

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:21 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஒப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.

லவ்டுடே திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து இன்று வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் ரசிகர்களோடு அமர்ந்து அந்த படத்தை இயக்குனரும், படத்தின் கதாநாயகனுமான பிரதீப் ரங்கநாதன் பார்த்தார்.

படம் முடிந்ததும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து அவரைத் தூக்கிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இதனால் தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்த படத்துகு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

"சார்"படக் குழுவினர் தலைப்பு மாற்றம் குறித்த அறிக்கை!

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும்-'புஜ்ஜி' திரைப்பட நடிகர் வரதராஜன் பழனிச்சாமி!

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'கருடன்' படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments