Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருதா? கடுப்பில் கவின் குழு!

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (09:21 IST)
கடந்த இரண்டு நாட்களாக ஷெரின் டார்கெட் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று லாஸ்லியாவை டார்கெட் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பது போல் தெரிகிறது.
 
அந்த வகையில் இன்று விருது கொடுக்கும் விழாவில் லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது வழங்கப்படுவதாக மோகன் வைத்யா அறிவிக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடையும் லாஸ்லியா, சாக்சியிடம் இருந்து அந்த விருதை பெற்று, இந்த விருது தனக்கு வேண்டாம் என்று தூக்கி எறிகிறார். இதனால் மோகன் வைத்யாவும் சாக்சியும் கோபம் அடைகின்றனர். தான் ஒரு ஜட்ஜ் என்றும், தனக்கு மரியாதை இல்லை என்றால் இந்த வீட்டில் என்ன நடக்கின்றது என்றும் சாக்சி கூற, அந்த விருதை தான் வாங்க முடியாது என்று லாஸ்லியா கூறுகிறார்.
 
லாஸ்லியாவை வேண்டுமென்றே கோபப்படுத்தி டென்ஷன் ஆக்குவதே இந்த விருதின் நோக்கம் என்பதால் இன்றைய டார்கெட் லாஸ்லியா என்று புரிய வருகிறது. இருப்பினும் கவின் குழுவினர் லாஸ்லியாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் சேரன் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதால் அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது. அடுத்த வாரம் வனிதாவை வெளியேற்ற போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் கங்கணம் கட்டி முடிவு செய்துள்ளனர் என்பது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களில் இருந்து தெரிய வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments