வளர்ந்து வரும் இளம் நடிகை கவின் முன்னாள் காதலியா?

வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (19:33 IST)
பிக்பாஸ் வீட்டில் கவின் ஒரு காதல் மன்னனாக வாழ்ந்து வருகிறார் என்பது தெரிந்ததே. முதலில் நான்கு பெண் போட்டியாளர்களுடன் ஜொள்ளுவிட்ட கவின், அதன் பின்னர் சாக்சியுடன் நெருக்கமாக பழகினார். இருவரும் திருமண பேச்சுவரை சென்றுவிட்டனர். ஆனாலும்  கவினுக்கு லாஸ்லியா மீதும் ஒரு கண் இருந்ததால் சாக்சி கவினிடம் சண்டை போட்டார். இதன் காரணமாக கவின் - சாக்சி காதல் முடிவுக்கு வந்தது
 
இந்த நிலையில் கவின் தற்போது லாஸ்லியாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இந்த காதல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் நீடிக்கும் என்றே கருதப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு ஒரு நடிகை மீது காதல் இருந்ததாகவும், ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன் அந்த காதல் முறிந்துவிட்டதாகவும் லாஸ்லியாவிடம் கவின் கூறியுள்ளார். இது பலரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி அந்த நடிகை யார்? என்று நெட்டிசன்கள் துப்பறிய தொடங்கிவிட்டனர்.
 
ஒருவழியாக நெட்டிசன்கள் கவினின் முன்னாள் காதலியை கண்டுபிடித்துவிட்டனர். கார்த்தியுடன் ஒரு வெற்றிப்படத்தில் நடித்த அந்த இளம் நடிகை தற்போது மிகப்பெரிய பட்ஜெட் படம் ஒன்றிலும் வெங்கட்பிரபு படம் ஒன்றிலும் நடித்து வருவதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அந்த நடிகை யார்? என்று நீங்கள் கண்டுபிடித்தால் கமெண்ட் பகுதியில் பதிவு செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் காதல் மன்னனுக்கு உண்டான மரியாதையே போச்சு - வீடியோ!