Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல மருத்துவமனை சேர்மனுக்கு நன்றி கூறிய லோகேஷ்!

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (20:25 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
 
அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி   உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.
 
இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
இந்த நிலையில், இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலீட்டிய நிலையில் இப்படம்  4  நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலீட்டியதாக தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில்,சென்னை பில்ரோத் மருத்துவமனையில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், குடும்பத்தினர், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என மொத்தம் 4500 பேருக்கு விஜய்யின் லியோ படத்திற்கான இலவச டிக்கெட் வழங்கப்பட்டது.
 
இவர்கள் அனைவரும் நாளை சென்னையில் உள்ள தியெட்டரில் இப்படத்தை பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில், பில்ரோத் மருத்துவமனையில் சேர்மனுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, லோகேஷ் தன் வலைதள பக்கத்தில் புற்று  நோயால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவ   ஊழியர்களுக்கு என  சிறப்பு ஸ்கீரினில் இப்படத்தை காண்பித்ததற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் வேலை இனிமேல்தான் ஆரம்பம்… கல்கி படம் பார்த்த கமல் பேச்சு!

இந்தியன், முதல்வன் & சிவாஜி ஆகிய மூன்று பேரும் ஒரே படத்தி… ஷங்கர் போட்ட திட்டம்!

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments