Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்கள் கைவிட்ட பிளடி பெக்கர் படத்தைப் பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

vinoth
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (10:11 IST)
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக உருவாகியுள்ள நெல்சன் சமீபத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய அதன் முதல் படமாக கவின் நடிப்பில் பிளடி பெக்கர் என்ற படத்தைத் தயாரித்து தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்தார்.

சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையில் உருவான இந்த படத்தில் கவின், ரெட்டின்ஸ் கிங்ஸி ஆகியோர் நடித்திருந்தார். டார்க் காமெடி வகையில் உருவாகி இருந்த படத்துக்கு நல்ல ப்ரமோஷன் செய்யப்பட்டதால் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் ரிலீஸுக்குப் பிறகு படம் சுத்தமாக ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. அதுமட்டுமில்லாமல் படம் சம்மந்தமாக ட்ரோல்களும் உருவாகின. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “ஆங்கிலத்தில் இத மாதிரி படம் பார்த்து இருக்கேன் தமிழில் இது புதுசு. தயாரிப்பாளர் நெல்சனுக்கு வாழ்த்துக்கள்.  கவினோட நடிப்பு நல்லா இருந்துச்சு. அந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் எல்லாம் எளிதாக நடித்த மாதிரி இருக்கு. ஆனா அதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பார் என்று தெரியும். எப்போதும் பார்க்கிற  மாதிரியான படம் இல்லாம வித்தியாசமான படம் பாக்கணும்ன்னு நினைச்சா கண்டிப்பா பிளடி பெக்கர் படத்தைப் பாருங்க” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை நடக்கிறது அஜித் & கோ பங்கேற்கும் ’24 H’ ரேஸ்… தயாரான AK!

பிரேக்கிங் பேட் சீரிஸில் இடம்பெற்ற வீட்டை 34 கோடி ரூபாய்க்கு விற்க உரிமையாளர் முடிவு!

ரிலீஸ் தேதியில் சிறு குழப்பம்… வீர தீர சூரன் படக்குழு எடுக்கப் போகும் முடிவு என்ன?

ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

கலெக்டரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கார்த்திக் சுப்பராஜ் ‘கேம்சேஞ்சர்’ கதையை எழுதியுள்ளார்… எஸ் ஜே சூர்யா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments