Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷ் தயாரிக்கும் ஃபைட் கிளப் படத்தின் முதல் பாடல் வெளியீடு

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (07:51 IST)
தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலமாக தன்னுடைய கேரியரை தொடங்கிய லோகேஷ் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார்.  இதையடுத்து அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலமாக உறியடி விஜய்குமாரின் 'ஃபைட் கிளப்' என்ற படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கும் படம் இது. இந்த படத்தை லோகேஷின் உதவியாளர் இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கதையை சசி கதை எழுத விஜய்குமார் வசனத்தை எழுதியுள்ளார்.

இந்த படம் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள யாரும் காணாத என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. மெலடி பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுத, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments