தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலமாக தன்னுடைய கேரியரை தொடங்கிய லோகேஷ் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலமாக உறியடி விஜய்குமாரின் 'ஃபைட் கிளப்' என்ற படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கும் படம் இது. இந்த படத்தை லோகேஷின் உதவியாளர் இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கதையை சசி கதை எழுத விஜய்குமார் வசனத்தை எழுதியுள்ளார்.
டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.