Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லி வசனத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம்… ஜி வி பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (07:47 IST)
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர் ஜி வி பிரகாஷ். அவர் இசையமைப்பில் விரைவில் அவரின் 100 ஆவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகராகவும் 25 படங்கள் என்ற மைல்கல்லை கிங்ஸ்டன் படம் மூலமாக எட்டியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் தான் நடிக்க இருந்த ஒரு படம் குறித்து பேசியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருந்தாராம். அந்த படத்துக்கு இயக்குனர் அட்லி வசனம் எழுதியிருந்தார் எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை எனப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியன் 2 படத்தோடு மோதும் பார்த்திபனின் ‘டீன்ஸ்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க இதுதான் காரணம்… தன் ஸ்டைலில் குழப்பமான பதிலைக் கொடுத்த கமல்!

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments