Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவர் என்ன சொன்னார்? ப்ரொபோஸ் செய்த ரசிகனுக்கு மீண்டும் பதில் கூறிய குஷ்பு!

கணவர் என்ன சொன்னார்? ப்ரொபோஸ் செய்த ரசிகனுக்கு மீண்டும் பதில் கூறிய குஷ்பு!
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (16:22 IST)
நடிகை குஷ்பு அரசியலில் இறங்கியதில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார். எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின.
 
பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார். இந்நிலையில் இப்போது அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தன் உடல் எடையைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார். உடல் எடையைக் குறைத்த அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களைக் கவர, ஒரு குறும்பு ரசிகர் ‘உங்களை நான் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்’ எனக் கூறியிருந்தார். 
 
அவருக்கு பதிலளித்த குஷ்பு ‘நீங்கள் ஒரு 21 வருடம் தாமதமாக கேட்டுள்ளீர்கள். எதற்கும் என் கணவரிடம் கேட்டு சொல்கிறேன்’ என கூலாக பதில் சொல்லியுள்ளார். இந்நிலையில் மீண்டும் அந்த நபர், உங்க கணவர் கிட்ட இருந்து எதாவது பதில் வந்துச்சா என்று கேட்க அதற்கு குஷ்பு, எதிர்பாராத விதமாக,  நான் மட்டும் தான் அவரின் ஒரே மனைவி அதனால் அவர் என்னை விட்டுகொடுக்க மாட்டேன் சாரினு சொல்லிட்டாரு என்று கூறியுள்ளார். இந்த ரிப்ளை பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகினியில் தெறிக்கவிட்ட கீர்த்தி பாண்டியன்!