பூக்களோடு போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!
Publish Date: Tue, 24 Aug 2021 (12:58 IST)
Updated Date: Tue, 24 Aug 2021 (13:05 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை.
அதனால் உடல் எடையை குறைத்து கவர்ச்சியில் கலக்கி வருகிறார். புகழோடு பூக்களாய் அழகாய் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் ரசனையில் மூழ்கி வர்ணனைக்கு ஆளாகியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்