Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎப் 2 சென்சார் & ரன்னிங் டைம்…. வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (13:33 IST)
கேஜிஎப் 2 படத்தின் சென்சார் தகவல் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார். கேஜிஎப் 2 படத்தின் டிரைலர்  இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்நிலையில் இப்போது வெளியாகி 24 மணிநேரத்தில் இந்த டிரைலர் 109 மில்லியன் (10.9 கோடி) பேரால் பார்க்கப்பட்டுள்ளது, இது இந்திய படங்கள் இதுவரை படைக்காத சாதனையாகும். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹோம்பலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இப்போது கேஜிஎப் 2 படத்தின் சென்சார் தகவல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. கேஜிஎப் 2 வுக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படம் 2 மணிநேரம் 48 நிமிடம் ஓடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சென்சார் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments