Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொண்ணா அடக்கமா எல்லாம் இருக்க முடியாது..' கீர்த்தி சுரேஷின் ’ரகு தாத்தா’ டிரைலர்..!

Siva
புதன், 31 ஜூலை 2024 (16:12 IST)
கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை திரைப்படமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவருடன் எம்.எஸ். பாஸ்கார், ஜெயக்குமார், ராஜூ ரவீந்திரன் உள்பட பலர் நடித்துள்ள நிலையில் இந்த படத்தை சுமன் குமார் என்பவர் இயக்கி உள்ளார்.

சீன் ரோல்டன் இசையில் உருவான இந்த படம் ’தங்கலான்’ ‘டிமான்டி காலனி 2’ ஆகிய படங்கள் வெளியாகும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த நிலையில் அந்த காலகட்டத்தில் நடக்கும் கதை ஆக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 இந்தியை திணித்தே தீருவோம் என்றால் இந்தி தெரியாது என்று சொல்லுவோம் என்ற வசனம் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட், இந்தி எதிர்ப்பு என அனைத்தும் கலந்த ஒரு கலவையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இந்த ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.  இந்த படம் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

அடுத்த கட்டுரையில்
Show comments