Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா இரண்டாக பிரிந்து போகும்: யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ்..!

Advertiesment
இந்தியா இரண்டாக பிரிந்து போகும்: யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ்..!

Siva

, வெள்ளி, 26 ஜூலை 2024 (19:37 IST)
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அந்த வகையில் உருவான திரைப்படம் தான் ‘போட்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுதந்திரத்திற்கு முன்பு அதாவது 1943 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் குண்டுகளை வீசும் போது அதிலிருந்து தப்பிக்க யோகி பாபு மற்றும் சிலர் படகில் கடலுக்குள் செல்கின்றனர். அப்போது ஏற்படும் அனுபவங்கள் சில சண்டைகள் பிரச்சனைகள் விபரீதங்கள் ஆகியவைதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் போது மாரடைப்பு.. நடிகை எம்.என்.ராஜம் மகள் மரணம்..!