Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்? கிண்டலடிக்கும் ரசிகர்கள்

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (20:40 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக கமல்ஹாசன் படத்தில் நடிக்க இருப்பதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கமலஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ’வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுக்கள் தற்போது அடிபட்டு வருகின்றன. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை அடுத்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கமலஹாசன்  தலைவன் இருக்கிறான் என்ற படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ‘இந்தியன் 2 படமே டிராப் என்று கூறப்பட்டு வரும் நிலையில் கமல்ஹாசனுக்கு அடுத்த படம் ஒன்று வருமா? அப்படி வந்தால் கீர்த்தி சுரேஷ் நடிப்பது குறித்து பேசலாம் என்று சினிமா ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments