Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் விஜய்க்கு வித்தியாசமாக வாழ்த்துகள் கூறிய கீர்த்தி சுரேஷ்…

நடிகர் விஜய்க்கு வித்தியாசமாக வாழ்த்துகள் கூறிய கீர்த்தி சுரேஷ்…
, திங்கள், 22 ஜூன் 2020 (21:32 IST)
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில்  வெளியான படம்  பெண்குயின். இப்படம் மக்களிடம் நல்ல வராவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த படத்தில் நடிக்க, ஷுட்டிங் தொடங்க ,இந்த கொரோனா ஊரடங்கு காலம் முடியவேண்டும் என்பதால் வீட்டில் இருந்தபடி வயலின் வாசிக்கப் பழகி வருகிறார்.

மேலும் தனது பழைய திறமையை தூசி தட்டிப் பார்க்கிறேன் எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில்,   தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இன்று 46 வது பிறந்த தினம். ரசிகர்கள் அடுத்து அவரது நடிப்பில் வரவுள்ள மாஸ்டர் படத்தை ஒப்பிட்டு மாஸ்டர் விஜய் என்று அவரைப் புகழ்ந்து ஹேப்பி பர்த்டே விஜய் என்று ஹேஸ்டேக் உருவாக்கி  டுவிட்டரில் டிரெண்டுசெய்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ்,மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள லைஃப் ஈஸ் வெறி சார்ட் நண்பா என்ற பாடலுக்கு வயலினால் வாசித்து வித்தியாசமான முறையில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது, வைரல் ஆகி வருகிறது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

TIK TOK Rowdy Baby சூர்யா ICU வில் தீவிர சிகிச்சை - வீடியோ