மாஸ்க் படத்தில் நான் ஹீரோ இல்லை… கவின் பகிர்ந்த அப்டேட்!

vinoth
புதன், 17 செப்டம்பர் 2025 (08:16 IST)
சிவகார்த்திகேயன் பாணியில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து ஆரம்பநிலை வெற்றியை பெற்றுள்ளார் கவின். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்போது கவின் தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்துக்கு ‘மாஸ்க்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்க இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் ‘மாஸ்ல்’ படம் பற்றியும் அதில் தன்னுடையக் கதாபாத்திரம் பற்றியும் கவின் பேசியுள்ளார். அதில் “மாஸ்க் படத்தில் என்னுடையக் கதாபாத்திரம் ‘க்ரே தன்மை’ கொண்டது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

சூர்யா 45, சூர்யா 46 இனிமேல் தான் ரிலீஸ்.. அதற்குள் சூர்யா 47 படப்பிடிப்பு தொடக்கம்..!

இளையராஜாவை தேடுனாங்க.. எங்கேயும் போகாத மனுஷன்.. எங்க போனாரு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments