Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாளில் 4 கோடி ரூபாய் கூட வசூல் இல்லை…. டிசாஸ்டர் ஆன கங்கனாவின் லேட்டஸ்ட் படம்!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (07:23 IST)
பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. முன்னணி ஒளிப்பதிவாளர் கங்கனாவின் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற மாட்டேன் என வெளிப்படையாகவே அறிவித்தார்.

சந்திரமுகி 2 படத்துக்குப் பிறகு கங்கனா கதாநாயகியாக நடித்த தேஜஸ் திரைப்படம் ராணுவப் பின்னணியில் உருவாகி கடந்த 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த படம் வெளியாகி முதல் வார இறுதி நாட்களான முதல் 3 நாட்களில் 3.8 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த படம் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments