2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் முந்தைய பாகத்துக்கும் இப்போது உருவாகும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.
ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். படம் பீரியட் திரைப்படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்குப் படம் ரிலீஸ் ஆகிறது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நவம்பர் 10 ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கேரள விநியோக உரிமையை துல்கர் சல்மான் கைப்பற்றியுள்ளார். தன்னுடைய “DQs Wayfarer films” நிறுவனம் வாயிலாக இந்த படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.