சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத் அடுத்து அவர் இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்துள்ளது. இந்த படம் பற்றி பேசிய கங்கனா “அந்த படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்” எனத் தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர் “இந்த படத்துக்கான நான் எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்து எடுத்துள்ளேன்.” எனக் கூறியிருந்தார். இந்த படம் நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள கங்கனா “படத்தின் ரிலீசை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்க உள்ளோம். விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.