Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்கள் படத்தில் எனக்கு வேடம் கொடுத்துவிடாதீர்கள்… அனிமல் இயக்குனரை விமர்சித்த கங்கனா!

Advertiesment
உங்கள் படத்தில் எனக்கு வேடம் கொடுத்துவிடாதீர்கள்… அனிமல் இயக்குனரை விமர்சித்த கங்கனா!

vinoth

, புதன், 7 பிப்ரவரி 2024 (07:55 IST)
இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  இயக்கிய அனிமல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது.  இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்த படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ஆணாதிக்கத்தை தன் படங்களில் பெருமையான விஷயமாக காட்டுகிறார் எனக் கூறி அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் நான் விமர்சனங்களைக் கண்டுகொள்வது கிடையாது என சந்தீப் கூறியுள்ளார். இந்த படத்தைப் பற்றி பாலிவுட் பிரபலங்களான ஜாவேத் அக்தர் மற்றும் கங்கனா ரனாவத் போன்றவர்களும் எதிர்மறை விமர்சனங்களை வைத்திருந்தனர்.

கங்கனாவின் விமர்சனத்தை நக்கலாக எதிர்கொண்ட சந்தீப் அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகக் கூறியிருந்தார். அதில் “சந்தீப் என்னுடைய விமர்சனத்தை சிரிப்பை பதிலாக கொடுத்து நக்கல் செய்திருந்தார். இதன் மூலம் அவர் ஆணாதிக்க மனப்பாண்மையுள்ள படங்களை இயக்குபவர் மட்டுமல்ல, அவரே அப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்தான் என தெரிகிறது.  எனக்கு தயவு செய்து உங்கள் படத்தில் வேடம் கொடுத்து விடாதீர்கள். ஏனென்றால் அப்புறம் உங்கள் கதாநாயகர்கள் பெண்ணியவாதிகளாக மாறிவிடுவார்கள். அதனால் உங்கள் படங்கள் பாதிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலையாள சினிமாவிலும் நடிகராக கால்பதிக்கும் இயக்குனர் அனுராக் காஷ்யப்!