Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியாவின் சேனையாக மாறிவிட்டது சிவசேனா: மீண்டும் தாக்கிய கங்கனா ரனாவத்

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (07:50 IST)
சோனியாவின் சேனையாக மாறிவிட்டது சிவசேனா
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சிவசேனாவை நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இதனால் அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தின் சில பகுதிகள் சமீபத்தில் இடிக்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் ’சிவசேனா கட்சி தனது கொள்கையை மறந்துவிட்டு சோனியாவின் சேனையாக மாறிவிட்டது’ என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று 
 
இதுகுறித்து அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ’பால்தாக்கரே அவர்களின் தீர்க்கமான கொள்கைகளால் சிவசேனா என்னும் இயக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசையின் காரணமாக அந்தக் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. அதிகார பசியால் சிவசேனா தற்போது சோனியாவின் சேனையாக மாறிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும், ‘ஒருவர் என்னை மிரட்டி மெளனமாக்கி விடலாம் ஆனால் லட்சக்கணக்கான மக்களை அவர்கள் மௌனமாக்க முடியாது என்றும் கங்கனா ரணவத் அதில் கூறியுள்ளார். தொடர்ச்சியாக சிவசேனாவை கங்கனா ரனாவத் தாக்கி வருவது அவருக்கு பின்னணியில் பாஜக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments