மகாராஷ்டிராவை மினி பாகிஸ்தான் என கங்கனா ரனாவத் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரது மும்பை வீட்டில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
சமீபத்தில் மகாராஷ்டிராவை பாதுகாப்பற்ற பகுதி என்றும், மினி பாகிஸ்தான் என்றும் நடிகை கங்கனா ரனாவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவ்வாறு பேசியதற்கு கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கங்கனாவிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசின் ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கங்கனாவின் மும்பை வீட்டில் மாநகராட்சி நோட்டிஸ் ஒட்டியுள்ளது. அதில் கங்கனா ரனாவத் தனது மாளிகையில் அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், கங்கனா ரனாவத் வீட்டில் கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியுள்ளதாகவும், மேலும் சில புதிய கழிவறைகளை கட்டியுள்ளதாகவும், வீட்டிலேயே அலுவலகமும் செயல்பட அனுமதி பெறவில்லையென்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம் கங்கனா ரனாவத்தை அச்சுறுத்துவதற்காக இது போன்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக கங்கனா தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.