Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.100 கோடி வசூலை வாரி குவித்த காஞ்சனா 3

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (14:57 IST)
காஞ்சனா 3 படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து மாபெரும்  சாதனை படைத்துள்ளது.


 
திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.
 
அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும்  பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும்  லாரன்ஸ்  வெறித்தனமாக நடித்து உள்ளார். 
 
திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான காஞ்சனா சீரிஸின் காஞ்சனா 3 பாகம் சமீபத்தில் வெளியாகி  பெரும் வரவேற்பை பெற்று சாதனையை படைத்து  ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.


 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், காஞ்சனா 3 படம் தற்போது வரை  ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் விக்கிபீடியா பக்கத்திலும் ரூ.100 கோடி வசூல் குவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments